சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்

ஆண்டிபட்டி: கன்னியாகுமரி மாவட்டம், காப்புக்காடு பகுதியைச் சேர்ந்த தனியார் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் 90க்கும் மேற்பட்டோர் மற்றும் ஆசிரியர்கள், காலாண்டு விடுமுறையையொட்டி தேனி மாவட்டத்திற்கு 2 பஸ்களில் சுற்றுலா வந்தனர். இன்று காலை சுமார் 5 மணியளவில் ஆண்டிபட்டியை அடுத்த குன்னூர் பகுதியில் வந்தபோது, ஒரு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வயலில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காலை நேரம் என்பதால் பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அலறி கூச்சலிட்டனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் மற்றொரு சுற்றுலா பஸ்சில் வந்தவர்கள், பஸ் இடிபாடுகளில் சிக்கிய மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர். இந்த விபத்தில் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் என 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி