Friday, July 5, 2024
Home » பற்களை வலுவாக்கும் தொய்யல் கீரை கடைசல்

பற்களை வலுவாக்கும் தொய்யல் கீரை கடைசல்

by Lavanya

நல்லா பசியெடுத்து சாப்பிடாமல் இருந்தால் கை, கால், உடல் அனைத்தும் சக்தியற்று, தலைவலி வருவது இயல்பு. உடனே உணவு எடுத்துக் கொண்டால் சக்தி கிடைக்கும். இதில் உள்ள அதிசயம் என்னவென்றால், அதுவரைக்கும் பசியால் காதடைந்து, கண் மங்கி, சக்தியில்லாது போன்று துவண்ட மனிதன் ஒரு வாய் சோறு போனதும், போன சக்தியெல்லாம் கிடைச்ச மாதிரி, தெளிவாயிடுவார். இதுதான் இயற்கை. அந்த அதிசயத்துக்கு காரணம். நம்ம நாக்கில் இருக்கிற சுவை மொட்டுக்கள், ‘டேட்ஸ் பட்ஸ்’ என அதற்குப் பெயர்உணவுப்பொருள் வாயுக்குள்ள போகுதோ, அப்போ அது நாக்கில் உள்ள மொட்டுக்களில் பட்டு சுைவயை உணர்ந்து, உடலின் பிராணசக்தியை அதிகப்படுத்தும் ஆற்றலாக மாற்றப்படுகிறது. சாப்பிடுகிற ஒவ்வொரு உணவிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சுவைகளை நிச்சயம் உணரமுடியும். அப்படியும் உணரமுடியாத சுவைகளை நம்ம சுவை மொட்டுக்கள் உணர்ந்து சக்தியாக்கி, ஆற்றலாக்கி, ஆரோக்கியச் சத்துக்களை கொடுக்கும்.

இப்படிப்பட்ட சுவைமொட்டுக்களை அழித்தொழிப்பதுதான் நம்மவர்கள் கண்டுபிடித்த கிளீனிங்க் ப்ராசஸ் ஒரு இரும்பு அல்லது பிளாஸ்டிக் தகட்டை வைத்து நாக்கைஅழுத்தும்போது பல சுவை மொட்டுக்கள் அழிந்து வந்திடும். அதனால நாள்பட நாக்கு சுவைக்கும் உணர்வு குறைந்து கொண்டே போய்விடும். ஒரு கட்டத்திற்கு பிறகு நாம என்ன சாப்பிடுகிறோம்னு ருசி தெரியாமலேயே போனால். சுவை தெரியாம போச்சுன்னா நாம் வாழ்கிற வாழ்க்கை நரகமாயிடும். ஆரோக்கியத்தின் முதல் அடி சுவை இழப்புதான். ஆனால் பெரும் பாலானோர் சுவை இழப்பை கண்டுகொள்வதே இல்லை.வெறும் கையால் நாக்கை தேய்த்தாலே போதும். நாக்கு சுத்தமாயிடும். வாரம் இரண்டு முறை நல்ல சுத்தமான நல்லெண்ணெயில் வாய் கொப்பளித்தால் போதும். நம் மக்கள் பல் தேய்ப்பதை ஒரு கடமையாக தான் செய்கிறார்கள். பற்பசை சந்தையில் உப்பு இருக்கா, புளியிருக்கானு கேட்டு கேட்டு விற்பனை நடக்குது, அதோட நாள் முழுக்க புத்துணர்ச்சி, 24 மணி நேரம் போராடும்னு வித விதவிதமாக வியாபாரம் செய்கிறார்கள்.

பல்லில் இருக்கும் அழுக்கையும், கிருமி களையும் நீக்குவதுதான் பல் தேய்ப்பதின் நோக்கம். அதற்கு உப்பு மட்டுமே போதும். நோனி (நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்) பழத்தினை வெயிலில் காயவைத்து ஒரு பங்கு இந்துப்பு சேர்த்து இடித்து பொடியாக்கி பல் துலக்க பயன்படுத்திக் கொள்வது சிறப்பு. இது பல்வலியை முழுதாக நீக்கும். பல்லுக்கு பலமே ஈறுகள்தான். பல்லை பலப்படுத்த பாதுகாப்பது, ஈறுகள்தான். ஒவ்வொரு முறை பல் தேய்க்கும்போது முதலில் ஈறுகளை மென்மையாக தேய்க்க வேண்டும். பின் பல்லை தேய்க்க வேண்டும். மிக முக்கியமான விஷயம் ஆபீஸ்க்கு கிளம்பும் அவசரத்தில் பொங்கலுக்கு வெள்ளையடிப்பது போல பிரஸ்ஸை வைத்து தேய்த்தெடுப்பது தவறு. சரியான முறையில் நம் கைவிரலை பயன்படுத்தி மிக மென்மையாக தேய்க்க வேண்டும். நாம் உணவு உண்ட உடனேயே வாய் கொப்பளிப்பதை தவிர்க்க வேண்டும். குறைந்தது 15 நிமிடம் முதல் 20 நிமிடம் கழித்துதான் கொப்பளிக்க வேண்டும். குழம்ப வேண்டாம்.

எந்த உணவு சாப்பிட்ட உடனேயே அந்த உணவின் சுவை நம் நாக்கை விட்டு போவதில்லை. சற்று நேரம் இருக்கும் அப்படி இருக்கும்போது எச்சில் உருவாகும். அந்த எச்சில் உணவை ஜீரணம் செய்ய உதவியாக இருக்கும். சாப்பிட்ட உடனேயே வாய் கொப்பளிக்கும்போது உமிழ் நீருக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.இரவு நேரங்களில் உணவு துகள்களை பற்களிடையில் வைத்து கொண்டு, மிட்டாய் வகைகளை உண்ட பின்னும் அப்படியே தூங்கிவிட்டால் அதில் உருவாகும் கிருமிகள் பல்லை சற்று அதிகமாகவே பதம் பார்த்து விடும், சொத்தைப் பல்லை உருவாக்கும். அது தாங்கமுடியாத வலியைத் தரும்.சொத்தைப் பல் வலியை நீக்க கிராம்பை நன்கு பொடித்து அதில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயை கலந்து வலிக்கும் பல்லில் வைத்தால் வலி போய்விடும்.

பல்லில் உள்ள கழிவுகளும் வெளியேறி சுத்தமாகி விடும். சொத்தைப் பல் வருவதை தடுக்க முறையாக பல்பொடியை தேய்க்கும் யுக்தியைக் கையாள வேண்டும்.பல்லின் வேர் நரம்புகள் நேரடியாக மூளையுடனும், நரம்புமண்டலத்துடனும் தொடர்புகொண்டுள்ளதால், வலி அதிகம் உணரப்படும். அது மட்டுமல்லாமல் பாதிப்பும் அதிகம். மற்ற செயல்பாடுகளை அது பாதிக்கும். அதோடு நாளமில்லா சுரப்பிகளின் சுரப்பித் தன்மையை இநபல் தொல்லை பாதிக்கும். பற்பசையைக் கொண்டு பல் தேய்க்கவில்லை என்றால் வாயில் துர்நாற்றம் வருகிறதுனு சொல்வதெல்லாம் சுத்த பொய். நல்ல சுத்தமான உணவை உண்டு வந்தால் எந்த துர்நாற்றமும் வராது. வயிற்றில் கோளாறு,வயிற்றுப் புண், ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் வாய்துர்நாற்றம் வரும். அதற்கு என்னதான் விலை உயர்ந்த பேஸ்டை பயன்படுத்தினாலும், வாயில் மவுத் பிரஸ்சனர் போட்டாலும் போவது கடினம்.

அதேபோல தொடர்ந்து வாயில் சூயிங்கம் மென்றுகொண்டிருந்தாலும் பல்லுக்கு பாதிப்பு வரும், தொடர்ந்து மென்று கொண்டிருந்தால் ஈறுகளுக்குள் பலவீனம் ஏற்பட்டு பல்லைத் தாங்கியிருக்கும் சக்தி குறைந்து பல் ஆட்டம் உண்டாகும், உடலின் வெப்ப நிலையைவிட அதிக குளிர்ச்சியான பொருளும், அதிக சூடான பொருளும் பல்லின் மேலுள்ள மென்மையான பாகத்தை பாதித்து பல்வலியை ஏற்படுத்தும். பல் கூச்சம் வரும்.ஆலம் விழுது, வேலங்குச்சி, நாயுருவி வேர், கரும்பூலாங்குச்சி, வேப்பங்குச்சி, துவரங்குச்சி என நம்மைச் சுற்றியுள்ள மரத்தின் குச்சிகளை பயன்படுத்தி பல்லைச் சுத்தம் செய்திருக்கிறார்கள் முன்னோர்கள். அதில் உள்ள தத்துவம் என்னவென்றால், தனக்கு அருகாமையில் உள்ள பொருள், பல் தேய்க்கும் முன் அந்த குச்சியை நன்கு மென்று அதன் நுனிப் பகுதியை மென்மையாக்குவர். அப்போது அந்த குச்சி, பட்டையிலிருந்து வரும் சாறு பல்லில் உள்ள கிருமிகளை நீக்கும். பின் அந்த குச்சியினால் பல்லையும், ஈறுகளையும் தேய்க்கும்போது கிருமிகள் அகற்றப்படுகிறது.

குச்சியைக் கொண்டு பல் தேய்க்கும்போது உருவாகும் சுவையை சுவைமொட்டுகள் உணர்ந்து அதற்கேற்ப உள் உறுப்புகளை சிறப்பாக வேைல ெசய்ய வைக்கிறது. உதாரணத்திற்கு, கசப்புச் சுவை கணையத்தை இயக்குகிறது. இதன் மூலம் சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும். ஆலம் விழுதின் துவர்ப்பு இரத்த உற்பத்தியை தூண்டு கிறது. இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடன் உடல் இயக்கம்
நடைபெறுகிறது.மணமூட்டிய பாக்கு, புகையிலை என தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்லுக்கும், ஈறுக்குமுண்டான தொடர்பு படிப்படியாக குறைத்துக்கொண்டு பல் ஆட்டம் காண்கிறது. உடலின் ஆரோக்கியம் பல்லிலும் அடங்கும். நவீன ஆராய்ச்சியாளர்கள் சர்க்கரை நோய்க்கு பல்லின்மீது படியும் அழுக்கும் ஒரு காரணம் என கண்டுபிடித்துள்ளனர்.

அந்த அழுக்கு இரைப்பைக்கு சென்று ஜீரணத்தை பாதித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்குகிறதாம்.பற்பசைகளை தொடர்ந்து வாங்க வேண்டும் அதற்கு நீங்கள் அடிமையாக வேண்டும் என்பதற்காகவும் பற்பசையில் நிக்கோடின் கலக்குகின்றனர். இது தொடர்ந்து சுவைக்கும் உணர்வையும், புற்று நோயையும் உருவாக்கும். ஒரு முறை பற்பசையை உபயோகித்து பல் தேய்க்கும்போது 7 முதல் 9 சிகரெட் குடிப்பதற்கு சமம்.சிறு குழந்தையிலிருந்து பல்லை கவனத்துடன் வளர்த்துவந்தால் ஆரோக்கியம் நிலையாகும். குழந்தை வளரும்போதே சுண்ணாம்புச்சத்து நிறைந்த உணவு பொருட்கள், புளிச்சகீரை, கேழ்வரகு, கம்பு முதலியவையுடன் நண்டு போன்ற அசைவ உணவிலும், சுண்ணாம்பு அதிகம் உள்ளது. இந்த முறையில் உணவை எடுத்துக் கொள்ளும்போது அதிலிருந்து கிடைக்கும் இயற்கையான சுண்ணாம்புச் சத்து உடலில் உறிஞ்சப்பட்டு தேவைப்படும் பாகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அது உடலின் எலும்புக்கு, ஆற்றலையும் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

  • ராஜ முருகன்

‘‘பல்லு போனா சொல்லு போச்சு’’

பல் தேய்க்க பற்பொடியை பயன்படுத்துவது சிறந்தது. மூலிகை கலந்து இந்துப்புடன் இருப்பது சிறப்பு.முதலில் பற்பொடியை விரலால் எடுத்து ஈறுகளுக்கும், பற்களுக்கும், தடவிக் கொண்டு 10 நிமிடம் அப்படியே இருந்து பின் வாய் கொப்பளித்து பல்லின் ஈறுகளை மிக மென்மையாக தேய்த்து விட்டு. பின் பல்லை தேய்த்துக் கொடுக்க வேண்டும். கடைசியாக வாய் கொப்பளித்துக் கொள்வதுதான் சிறப்பு.

தொய்யல் கீரை கடைசல்

தேவையான பொருட்கள்:

தொய்யல் கீரை – 1 கட்டு,
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி
பூண்டு – 7 பல்,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – சிறிது,
சீரகம் – 1 தேக்கரண்டி,
மிளகு – 2 தேக்கரண்டி (பொடித்தது),
நெய் – 3 தேக்கரண்டி,
கடுகு – 1/2 தேக்கரண்டி.

செய்முறை

கீரையை சுத்தப்படுத்தி, பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், சீரகம், மிளகுத் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேகவிடவும்.நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து நன்கு கடைந்து, நெய்யில் கடுகைத் தாளித்து கொட்டவும்.உடலுக்கு குளிர்ச்சியும், பலத்தையும் கொடுக்கும்.தொய்யல் கீரையை காட்டுக் கீரை எனவும் சொல்வார்கள்.

You may also like

Leave a Comment

14 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi