Thursday, July 4, 2024
Home » நாளை முதல் 12ம் தேதி வரை ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்

நாளை முதல் 12ம் தேதி வரை ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்

by Karthik Yash

சென்னை: போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: மெட்ரோ ரயில் பணிகள் ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்திய காலனி 1 வது பிரதான சாலை சந்திப்பிலிருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை மேற்கொள்ள உத்தேசிக்கப் பட்டுள்ளதால் நாளை முதல் 12ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் ஆற்காடு சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்திய காலனி 1வது பிரதான சாலை சந்திப்பிலிருந்து டாக்டர் அம்பேத்கார் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

* கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் நேராக டாக்டர் அம்பேத்கர் சாலைக்கு ஆற்காடு சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, யுனைடெட் இந்திய காலனி 1வது பிரதான சாலை, ரங்கராஜபுரம் பிரதான சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
* வடபழனியில் இருந்து ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். யுனைடெட் இந்திய காலனி 1வது பிரதான சாலையில் ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து ஸ்டேசன் வியூ சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
* விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் ஸ்டேசன் வியூ சாலை சந்திப்பில் இருந்து நேராக ஆற்காடு சாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள், யுனைடெட் இந்திய காலனி 1வது பிரதான சாலை, 2வது குறுக்கு தெரு மற்றும் 2வது பிரதான சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
* விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் தி.நகர் செல்ல ஸ்டேசன் வியூ சாலை மற்றும் பசுல்லா மேம்பாலம் வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
* டாக்டர் அம்பேத்கர் சாலையில் ஒரு வழி பாதை ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து 2வது அவென்யூ வரை தற்போது அமுளில் உள்ளது. மேற்கண்ட சாலையில் ரத்தினம்மாள் தெரு சந்திப்பில இருந்து ஆற்காடு சாலை சந்திப்பு வரை இருவழி பாதையாக மாற்றப்படுகிறது.
* ரத்தினம்மாள் தெருவில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் சாலை, கார்ப்பரேசன் காலனி சாலை மற்றும் பாளையக்காரன் தெரு வழியாக ஆற்காடு சாலைக்கு சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

You may also like

Leave a Comment

seventeen − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi