நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிப்பு!

சென்னை: விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க தடை விதித்தது சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது; விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் 6-10-2024 அன்று சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது.

இதில் தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், விமானப்படை தலைவர், தலைமைச்செயலாளர், மாநில அமைச்சர்கள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு ஒத்திகைகள் 1.10.2024 முதல் 5.10.2024 வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது.

எனவே பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரை பகுதியை 1.10.2024 முதல் 6-10-2024 வரை (அரசு ஏற்பாடுகள் தவிர) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), Remotely Piloted Aircraft Systems (RPAS)/Drone மற்றும் எந்த விதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது.

 

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!