நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெட்ரோலை மிஞ்சியது தக்காளி விலை.. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் தக்காளி விலை கிலோ ரூ.146!!

சென்னை : சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை ரூ.20 குறைந்த நிலையில் ரூ.100 தாண்டியே விற்பனை ஆகி வருகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பீன்ஸ் விலை இன்று கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.110க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ.200, இஞ்சி விலை ரூ.220, பூண்டு விலை ரூ.200 விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே நாடு முழுவதும் பல நகரங்களில் ஒரு கிலோ தக்காளி விலை 1 லிட்டர் பெட்ரோல் விலையை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் லக்னோவில் 1 கிலோ தக்காளி ரூ.146க்கு விற்பனை ஆகிறது. அங்கு 1 லிட்டர் பெட்ரோல் ரூ.96.55க்கு விற்கப்படுகிறது.

சிக்கிம் : கேங்டாக்

பெட்ரோல் ஒரு லிட்டர் : ரூ.102.55
தக்காளி ஒரு கிலோ : ரூ.130

கேரளா: திருவனந்தபுரம்

பெட்ரோல் ஒரு லிட்டர் : ரூ.109.71
தக்காளி ஒரு கிலோ : ரூ.130

டெல்லி

பெட்ரோல் ஒரு லிட்டர் : ரூ.96.76
தக்காளி ஒரு கிலோ : ரூ.120

பீகார் : பாட்னா

பெட்ரோல் ஒரு லிட்டர் : ரூ.107.22
தக்காளி ஒரு கிலோ : ரூ.120

தமிழ்நாடு : சென்னை

பெட்ரோல் ஒரு லிட்டர் : ரூ.102.62
தக்காளி ஒரு கிலோ : ரூ.117

சத்தீஸ்கர் : ராய்ப்பூர்

பெட்ரோல் ஒரு லிட்டர் : ரூ.102.44
தக்காளி ஒரு கிலோ : ரூ.115

கோவா: பனாமா

பெட்ரோல் ஒரு லிட்டர் : ரூ.97.66
தக்காளி ஒரு கிலோ : ரூ.110

மராட்டியம் : மும்பை

பெட்ரோல் ஒரு லிட்டர் : ரூ.106.29
தக்காளி ஒரு கிலோ : ரூ.108

புதுச்சேரி

பெட்ரோல் ஒரு லிட்டர் : ரூ.96.14
தக்காளி ஒரு கிலோ : ரூ.100

Related posts

அக்.27ல் தவெக மாநாடு: காவல்துறை அனுமதி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?