கனமழை, விளைச்சல் பாதிப்பால் நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.300 உயரும் அபாயம் :செப்டம்பர் வரை விலை குறைய வாய்ப்பில்லையாம்!!

டெல்லி : நாடு முழுவதும் தக்காளி தட்டுப்பாடு நிலவுவதால் இன்னும் சில வாரங்களுக்கு விலை குறைய வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது. முறையற்ற பருவமழை , போக்குவரத்து செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் தக்காளியின் விலை கடந்த 1 வாரமாக பல மடங்கு உயர்ந்துள்ளது. 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க தக்காளியை பெருமளவு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் புதிதாக தக்காளி சாகுபடி செய்யப்படவில்லை. எனவே செப்டம்பர் வரை தக்காளிக்கு பற்றாக்குறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதலால் தக்காளி விலை சீரடைய செப்டம்பர் ஆகலாம் என தேசிய மண்டக்க மேலாண்மை சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கனமழை, விளைச்சல் பாதிப்பால் நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.300 உயரும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து அவற்றை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்ப நுகர்வோர் விவகாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்