முதல் வெற்றிக்காக இன்று ஆஸி-இலங்கை மோதல்

லக்னோ: உலக கோப்பை தொடரில் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் முதல் வெற்றிக்காக இன்று லக்னோவில் களம் காண உள்ளன. இந்தியாவில் ஐசிசி உலக கோப்ைபத் தொடர் தெ ாடங்கி 10 நாட்கள் ஆகி விட்டன. பெரும்பான்மையான அணிகள் தலா 2 முதல் 3 ஆட்டங்களில் ஆடி உள்ளன. அவற்றில் ஆஸ்திரேலியா, இலங்கை, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை.

இவற்றில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும் முன்னாள் சாம்பியன்கள். ஆஸி 5 முறையும், இலங்கை ஒரு முறையும் சாம்பியன் பட்டங்களை வசப்படுத்தியுள்ளன. ஆஸி, இலங்கை அணிகள் தாங்கள் விளையாடிய முதல் 2 லீக் ஆட்டங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளன. அதனால் இந்த 2 அணிகளும் முதல் வெற்றி பெறும் முனைப்பில் தங்களின் 3வது லீக் ஆட்டத்தில் இன்று களம் காண உள்ளன. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி, குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி என 2 அணிகளும் ‘வெற்றிக்காக’ கட்டாயம் மாற்றங்களுடன் களம் இறங்குவார்கள். எப்படி இருந்தாலும் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க போராடும் இந்த 2 அணிகளில் ஒரு அணிக்கு இன்று ‘முதல்’ வெற்றி நிச்சயம். மற்றொரு அணிக்கு ஹாட்ரிக் தோல்வி கட்டாயம்.

* கடைசியாக… இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இலங்கை 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. உலக கோப்பையில்.. முன்னாள் சாம்பியன்களான இந்த 2 அணிகளும் உலக கோப்பை தொடர்களில் 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. ஆஸி 8லும், இலங்கை 2லும் வெற்றி வாகை சூடியுள்ளன. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது. வெளிநாடுகளில்…

இந்த 2 நாடுகளுக்கும் தொடர்பில்லாத மற்றநாடுகளில் நடந்த ஆட்டங்களில் ஆஸி 9தடவையும், இலங்கை 2தடவையும் வென்றுள்ளன. மற்ற அணிகளுடன்.. இவ்விரு அணிகளும் மற்ற நாடுகளுடன் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, தலா 4 தோல்விகளை சந்தித்துள்ளன.

லக்னோ அரங்கில்…

* இங்கு இதுவரை 5 ஆட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் வெஸ்ட் இண்டீஸ் 3 ஆட்டங்களில் ஆப்கானை வீழ்த்தி உள்ளது. அது ஆப்கானிஸ்தானில் 2019 நவம்பரில் நடைபெற வேண்டிய இரு தரப்பு தொடர். பாதுகாப்பு காரணங்களுக்காக லக்னோவில் நடந்தது. லக்னோவில் நடந்த முதல் மோதலும் அதுதான்.

* எஞ்சிய 2 ஆட்டங்களில் ஒன்றில் இந்தியா 2022ம் ஆண்டு தெ.ஆப்ரிக்காவையும், மற்றொன்றில் தெ.ஆப்ரிக்கா சில நாட்களுக்கு முன்பு ஆஸியையும் தோற்கடித்துள்ளன.

* இந்த தொடரில் ஆஸி அணி2வது முறையாக லக்னோ அரங்கில் விளையாட இருக்கிறது. நடப்புத் தொடரில்…

* ஆஸி அணி சென்னையில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2வது லீக் ஆட்டத்தில் தெ.ஆப்ரிக்காவிடம் 134ரன் வித்தியாசத்திலும் வீழ்ந்தது.

* இலங்கை அணி டெல்லியில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் தெ.ஆப்ரிக்காவிடம் 102 ரன் வித்தியாசத்திலும், ஐதராபாத்தில் நடந்த 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 6விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது