அகமதாபாத்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு இன்று செல்கிறார். மக்களவையில் எதிர்கட்சி தலைவரான பிறகு ராகுல்காந்தி பேசிய பேச்சால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது. பா.ஜ தொண்டர்கள் அங்கு கல்வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து ராகுல்காந்தி இன்று அங்கு செல்ல உள்ளார். வன்முறையால் பாதிக்கப்பட்ட கட்சித் தொண்டர்களை அவர் சந்தித்து பேச உள்ளார். மேலும் ராஜ்கோட் விளையாட்டு மண்டல தீ விபத்து, வதோதராவில் படகு கவிழ்ந்தவிபத்து, மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்து உள்பட்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் ராகுல்காந்தி சந்திக்கிறார்.
இன்று ராகுல் காந்தி குஜராத் பயணம்
previous post