புகையிலை நிறுவனங்கள் பதிவு செய்ய தவறினால் அக்.1ம் தேதி முதல் ரூ.1லட்சம் அபராதம்

புதுடெல்லி: பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் இயந்திரங்களை ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்று ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி இயந்திரங்களை பதிவு செய்ய தவறினால் ரூ.1லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும். இந்நிலையில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் பேக்கிங் இயந்திரங்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு அடுத்த மாதத்துடன் முடிவடைகின்றது. புகையிலை பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் காலக்கெடுவுக்குள் இயந்திரங்களை பதிவு செய்யவேண்டும். தவறும்பட்சத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்\” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!

சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!