நத்தத்தில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 560 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புறநகர் டிஎஸ்பி உதயகுமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிலையம் பகுதியில் ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்ததை அடுத்து அந்த கடையில் இருந்து 560 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து பதுக்கி வைத்திருந்த ஜஹாங்கீர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

டெல்லியில் புதிய குற்றவியல் சட்டத்தின்படி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு

கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 24 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை: தொடரும் அட்டூழியம்