டிஎன்பிஎஸ்சி நடத்தும் பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படுவதில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி

மதுரை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படுவதில்லை. இதற்கு நீதித்துறை தேர்வுகளும் விதிவிலக்கல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. 90 காலியிடங்களுக்கான இந்த தேர்வை மொத்தம் 2.38 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு இதுவரை வெளியிடப்படாத நிலையில் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் விடைக்குறிப்பு வெளியிடவும், மொழிபெயர்ப்பு தவறான 6 வினாக்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக்குறிப்பு வெளியிடுவதில்லை. இதற்கு நீதித்துறை தேர்வுகளும் விதிவிளக்கல்ல என அதிருப்தி தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவரிடம் விளக்கம் பெற்று தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

லால்குடி அருகே பெண் தெய்வ கற்சிலை கண்டெடுப்பு

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் மோடி பங்கேற்பு; பல்வேறு தரப்பினரும் விமர்சனம்

கூல் லிப் போதைப்பொருளை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவித்து நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக் கூடாது? : ஐகோர்ட் கேள்வி