டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் சேலத்தில் இன்று தொடக்கம்: இது வரை சாம்பியன்கள்

சேலம்: தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 8வது தொடர் சேலத்தில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது. சேலத்தில் இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும், கோவையில் ஜூலை 13 முதல் ஜூலை 18ம் தேதி வரையிலும், திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் ஜூலை 24ம் தேதி வரையிலும் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும்.

தொடர்ந்து திண்டுக்கல்லில் ஜூலை 26, 27, 28 தேதிகளில் லீக் ஆட்டங்களும், ஜூலை 30ம் தேதி முதல் குவாலிபயரும், ஜூலை 31ம் தேதி எலிமினேட்டரும் நடைபெற இருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் டிஎன்பிஎல் தொடரின் 2வது குவாலிபயர் ஆக.2ம் தேதியும், இறுதி ஆட்டம் ஆக.4ம் தேதியும் நடைபெறும்.

டிஎன்பிஎல் தொடர் மூலம் அறிமுகமான சஞ்சய் யாதவ், சோனு யாதவ் உட்பட பலர் ஐபிஎல் தொடர்களில் வாய்ப்பு பெற்று கலக்கி வருகின்றனர். எனவே தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர்களிடையே டிஎன்பிஎல் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. கூடவே இந்திய அணி நட்சத்திரங்கள் ஆர்.அஷ்வின், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் (இருவரும் ஜிம்பாப்வே சென்றுள்ளனர்), அருண் கார்த்திக் என பலரும் களம் காண உள்ளனர். இன்று இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், அதிக முறை சாம்பியன் சேப்பாக் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு