தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மேகதாது அணை கட்டுவது பற்றி அறிவிப்பை கர்நாடக பட்ஜெட்டில் வெளியிட்டார் முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: மேகதாது அணை கட்ட தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக சட்டமன்றத்தின் முதல் பட்ஜெட்டிலேயே மேகதாது அணை கட்டுவது பற்றி அறிவிப்பை முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ளார்.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைபற்றியது. இதனை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் நீண்ட கால கோரிக்கையான மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தபடும் என துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இதனை தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஒன்றிய நீர்வளதுறை அமைச்சரை சந்தித்து தமிழகத்திற்க்கு வழங்க வேண்டிய காவிரி நீர் தொடர்பாக கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கர்நாடக சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்வர் சித்தராமையா கூறியதாவது;
விரைவில் மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசின் அனுமதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாது சமன்படுத்துதல், குடிநீர் திட்டத்துக்கான அனுமதி பரிந்துரை ஒன்றிய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அணை கட்ட தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கையை முதன்மையாக செயல்படுத்தப்படும். மேகதாது அணைக்கான சுற்றுசூழல் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்