டிஎன்பிஎஸ்சி மூலம் ஆவினில் 322 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அதிகாரி தகவல்

சென்னை: ஆவினில் 322 காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளது என பால்வளத்துறை அதிகாரி தெரிவித்தார். கடந்த 2020 முதல் 2021ம் ஆண்டு வரையில் சென்னையில் உள்ள ஆவின் தலைமையகம், திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி உள்ளிட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் 236 பேர் நேரடியாக பணி அமர்த்தப்பட்டனர். இந்த பணியிடங்களில் தகுதியில்லாத பலரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகத்துக்கு புகார் வந்தது. விதிகளை மீறி பணியில் சேர்ந்ததாக மேலாளர்கள், துணை மேலாளர்கள் உள்ளிட்ட 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதன்படி மேலாளர் வரையிலான பதவியிடங்கள், அரசின் உத்தரவைப் பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாகவே நிரப்பப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இதுகுறித்து பால்வளத்துறை அதிகாரி கூறுகையில், ‘‘காலியாக உள்ள 322 பணியிடங்கள் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் வெளியிட்டுள்ளார். அதன்படி தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடும். மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய 26 வகையான 322 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்’’ என்றார்.

Related posts

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை

ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்