தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்: பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யபட்டுள்ளார். 2019 முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி வகித்து வந்த நிலையில் புதிய தலைவர் நியமனம் செய்யபட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக செல்வப்பெருந்தகை வகித்து வந்த பதவிக்கு எஸ்.ராஜேஷ்குமார் நியமனம் செய்யபட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவம் விதமாக இந்த நியமனம் அமைந்துள்ளது. ஏற்கனவே பெண் ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி பேச்சு வார்த்தை போன்ற பல்வேறு குழுக்களில் செல்வப்பெருந்தகை இடம்பெற்றிருந்தார். 2006-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தொடங்கிய அரசியல் பயணம், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். தொடர்ந்து படிப்படியாக தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக பதவி வகித்தார்.

Related posts

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!