திருவொற்றியூரில் ரயில் மீது கல் எரிந்த வாலிபர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் ரயில் மீது கல் எரிந்த வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அகர்தலாவில் இருந்து பெங்களூரு வரை சென்ற ஹம்சபர் விரைவு ரயில் நேற்று முன்தினம் மாலை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் அருகே வந்தது. அப்போது மர்ம நபர் ஒருவர் கல்லை எடுத்து வேகமாக ரயில் மீது எரிந்துள்ளார். இதில் பி 9 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து ரயில் டிக்கெட் பரிசோதகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

ரயில்வே பாதுகாப்பு படை டி.எஸ்.பி. செந்தில்குமரன் உத்தரவுப்படி உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற திருவொற்றியூர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்தில் ​​சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் திருவொற்றியூர் சரவணா நகரைச் சேர்ந்த விக்னேஷ் (23) என்பதும், எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் வீசியவர் என்பதும் தெரிந்தது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட விக்னேஷ், மறுநாள் கோர்ட்டில் ஆஜராகும்படி தாய் ருக்மணியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை