சென்னை திருவொற்றியூரில் மழை நீரில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதால் அச்சம்: வாகனங்களில் படிந்த எண்ணெய் கழிவுகளால் மக்கள் கவலை

சென்னை: சென்னை திருவொற்றியூரில் மழை நீரில் கச்சா எண்ணெய் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். சென்னை மற்றும் புறநகரில் புரட்டியெடுத்த புயலால் புழல் ஏறி கொள்ளளவு முழுவதும் நிரம்பியது. ஏறி நிரம்பி வழிந்ததால் உபரி நீரானது திறக்கப்பட்டு கொசஸ்தலை அற்று வழியாக திறந்து விடப்பட்ட நிலையில் எண்ணூர் முகத்துவாரம் வழியாக தண்ணீர் கடலுக்கு செல்ல வேண்டும்.

ஆனால் புயலின் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டதால் எண்ணூர் முகத்துவாரத்தில் தண்ணீரானது கடல் உள்வாங்காத காரணத்தால் கொசஸ்தல ஆற்றில் நிரம்பி வழிந்த தண்ணீர் திருவொற்றியூர், மணலி, சடையன்குப்பம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளில் புகுந்தது. திருவொற்றியூரில் பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் இயங்கி வருவதால் ஆற்றிலிருந்து வெளிவந்த கச்சா எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகினர்.

வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சக்கர வாகனங்கள்,4 சக்கர வாகனங்களை கச்சா எண்ணெய் கழிவுகள் பரவியுள்ளது. தண்ணீரில் கலந்த எண்ணெயானது திடீரென தீ பற்றி கொள்ளும் என்பதால் சமையலுக்கு கூட நெருப்பை பற்றவைக்க முடியாமல் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.தண்ணீரில் கலந்த கச்சா என்னை கழிவுகள் காரணமாக ஒரு வித எரிபொருள் வாசனை வருவதால் சுவாச பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை நின்று 2 நாட்களுக்கு மேலாகியும் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்றும் படர்ந்துள்ள எண்ணெய் கழிவுகள் முறையாக அகற்றவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்