திருவேற்காடு பகுதிகளில் குட்கா சப்ளை செய்தவர் கைது: 330 கிலோ, லோடு ஆட்டோ பறிமுதல்

பூந்தமல்லி: திருவேற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோலடி பகுதியில் திருவேற்காடு போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு லோடு ஆட்டோவை போலீசார் வழிமறித்து வாகனத்திற்கு உரிய ஆவணங்களை அதன் ஓட்டுனரிடம் கேட்டனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது. பின்னர், லோடு ஆட்டோ டிரைவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் 10வது தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (38) என்பதும், அவர் திருவேற்காடு, கோலடி மற்றும் அயனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளுக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விநியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் இருந்த 330 கிலோ குட்கா மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி

நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு

நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது