திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர் ராஜேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஏரி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான ராஜேஷ். இவர் கும்பகோணத்தில் உள்ள நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது வருமானத்தை நம்பியே குடும்பத்தினர் இருந்து வந்த நிலையில், ராஜேஷ் ஆன்லைனில் கடன் வழங்கும் செயலி மூலம் அடிக்கடி கடன் பெற்று அதனை முறையாக திருப்பி செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வந்த லிங்க் மூலம் கடன் வழங்கும் செயலிக்கு சென்று ஆன்லைன் மூலம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. வாங்கிய 5 ஆயிரம் ரூபாயை வட்டியுடன் ஓராண்டுக்கு முன்பே 20 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். இருப்பினும் ஆன்லைனில் கடன் வழங்கிய நிறுவனத்தினர் வாட்ஸ் அப் மூலம் ராஜேஷுக்கு தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். மேலும், ராஜேஷின் புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக்கி, அதனை அவருக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த ராஜேஷ், பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.