திருவாரூர் அருகே ஜவுளி கடையில் திடீர் ‘தீ’ ₹10 லட்சம் துணிகள் நாசம்

வலங்கைமான் : திருவாரூர் அருகே ஜவுளி கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ₹10 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் திருமலை. வீட்டின் முன்புறம் ஜவுளிக்கடை நடத்தி வரும் இவர், நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை பூட்டியிருந்த கடைக்குள் திடீரென தீப்பிடித்து மளமளவென பற்றி எரிந்தது.

தகவல் அறிந்த வலங்கைமான் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மேலும் தீ பரவாமல் இருக்க போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த ₹10 லட்சம் மதிப்பிலான ஜவுளிகளும், ₹40 ஆயிரம் ரொக்கமும் எரிந்து சாம்பலானது.தீ விபத்து குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிந்து மின் கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இந்தியாவிடம் தொடர் தோல்வி வெற்றியை தொடங்குமா தெ.ஆ: இன்று சென்னையில் பெண்கள் டி20

‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளிடம் வீடியோகாலில் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: உதவித்தொகை குறித்த தகவல்களை கேட்டறிந்தார்

அதிமுக பகுதி செயலாளர் கொலையில் 10 பேர் கைது