திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 217 மனுக்கள்

 

திருவாரூர், ஜூலை 25: திருவாரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 214 மனுக்களை கலெக்டர் சாரு பெற்றுக்கொண்டார்.திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. நேற்று நடந்த கூட்டத்துக்கு கலெக்டர் சாரு தலைமை வகித்தார். இதில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 214 மனுக்கள் பெறப்பட்டன.மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது, குறித்த காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.அதைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால் அளவீடு செய்யும் பணியை கலெக்டர் சாரு பார்வையிட்டு, மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தின் இயற்கை மரண நிவாரண தொகையாக 9 பயனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.ஒரு லட்சத்து 53 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

Related posts

சீட் திட்டத்தில் பயன்பெற சீர் மரபினர் விண்ணப்பிக்கலாம்

பஸ் நிலையத்தில் பொருட்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

ராஜபாளையம் அருகே காற்றின் வேகத்தால் கடல்போல் காட்சியளிக்கும் கண்மாய்