ஜனவரியில் 438% கூடுதல் மழை பொழிவு.. திருவாரூர், நாகையில் மிக கனமழை பெய்யும்: பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரியிலும் வடகிழக்கு பருவமழை தொடர்கிறது. 2 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறையும்; தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பில்லை.

ஜனவரியில் கடலூரில் 130 ஆண்டுகளில் 2வது அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் ஜனவரி மாதத்தில் நேற்று பெய்ததே அதிகபட்ச மழையாகும். ஜனவரி மாதத்தில் 438 சதவீதம் கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணமலையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழ்நாடு கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, திருவாரூர், சென்னையில் இன்று கனமழை பெய்யக்கூடும். குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணிநேரத்தில் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அறியலூரம் பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 4 மாலை மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related posts

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது