திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ரூ. 1,000 கோடி முதலீட்டில் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் ஆலை: தமிழக அரசு தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ரூ. 1,000 கோடி முதலீட்டில் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் ஆலை நிறுவப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியை தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. பிரபல மோட்டார் சைக்கிள் ஆனா ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் உற்பத்தியை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அமைக்கவுள்ளது.

60 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ. 1000 கோடி முதலீட்டில் இந்த எலக்ட்ரிக் ராயல் என்ஃபீல்டு வாகனம் முதன்முறையாக தயாராகிறது. இந்த நிதி ஆண்டில் இதற்கான பணியை தொடங்குவோம் என்று அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசின் தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் பணிகள் நடைபெற்று உற்பத்தி தொடங்கி உள்ள நிலையில், இந்த அடுத்த தலைமுறைகனா எலக்ட்ரிக் வாகனம் மிகவும் அதிக அளவில் தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கக்கூடிய மாவட்டத்தில் ஆரம்பத்தில் மூலம் அங்கு ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சர் மோட்டார் நிறுவனம் தான் இந்த ராயல் என்ஃபீல்டு என கூறப்படுகிறது. அந்த நிறுவனத்துடைய இந்த மின்சார இருசக்கர வாகனம் என்பது பெரிதும் முக்கிய முதலீடாக பார்க்கப்படுகின்றது.

தொழில் துறை சார்பில் கடந்த சில தினங்களாக ஹ்யுண்டாய் கார் நிறுவனத்தின் உடைய முதலீடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தொடங்கி வைத்த இரண்டு திட்டங்கள் இருக்கின்றன, இதன் தொடர்ச்சியாக சிஸ்கோ என்ற அமெரிக்க நிறுவனம் பெரிய அளவிலான முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

 

 

Related posts

ஜெட் விமான சோதனை ஓட்டம்: மயிலாடுதுறையில் நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி