திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரமோற்சவம் நிறைவு

திருவள்ளூர்: திருவள்ளூர் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோயில் ஸ்தலம் திருஞானசம்மந்த சுவாமிகளால் பாடல் பெற்றதாகும். சிவாலயங்களுக்கு நடுநாயகமாக திகழும் வீஷாரண்ய ஷேத்திரம் என்று அழைக்கப்படும் திருவள்ளூரில் உள்ள திருமாலின் வினையை தீர்த்து அருளிய திரிபுரசுந்தரி அம்பாள் சமேத  தீர்த்தீஸ்வரர் சுவாமி என்ற நாமத்துடன் கோயில் கொண்டு பன்னெடுங்காலமாக அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் கடந்த 1ம் தேதி பங்குனி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. அன்று மாலை விக்னேஸ்வரர் உற்சவமும், 2ம் தேதி காலை துவஜாரோஹனம் சப்பரம், இரவு சிம்ம வாகனத்திலும், 3 ம் தேதி காலை ஹம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும், 4 ம் தேதி காலை பூத வாகனத்திலும், இரவு அதிகார நந்தி சேவையும், 5ம் தேதி காலை நாக வாகனத்திலும், இரவு சந்திரபிரபையிலும், 6ம் தேதி காலை மயில் வாகனத்திலும்.

இரவு ரிஷப வாகனம் பஞ்சமூர்த்தி தரிசனம் மற்றும் சனி பிரதோஷமும், 7ம் தேதி காலை அஸ்மானகிரியும், இரவு யானை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. 8ம் தேதி காலை ரத உற்சவமும், இரவு தடாக பிரதட்சணமும், 9ம் தேதி காலை பிஷாடனர் உற்சவமும், இரவு திருக்கல்யாணம் மற்றும் குதிரை வாகனத்திலும், 10ம் தேதி காலை சிவிகை பல்லக்கிலும், இரவு புஷ்ப பல்லக்கிலும் வலம் வந்தார். நேற்று நடராஜர் அபிஷேகமும் விமான கோபுரத்திற்கு சிறப்பு பூஜையும், தீர்த்தவாரியும் நடைபெற்றது. கடைசி நாளான இன்று மகா அபிஷேகம் நடைபெற்றது. இரவு தொட்டி உற்சவமும் பந்தம்பரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ரா.ரவி குருக்கள் சிறப்பாக செய்திருந்தார்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு