இன்றுமுதல் வரும் 20ம்தேதி வரை திருத்தணி முருகன் கோயிலுக்கு படியில்தான் செல்ல வேண்டும்

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு இன்று முதல் வருகின்ற 20ம் தேதி வரை படிக்கட்டு வழியாகத்தான் பக்தர்கள் செல்லவேண்டும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மலைச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதன்காரணமாக பக்தர்கள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மலைக்கோயிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு கடந்த 11ம் தேதி முதல் வருகின்ற 16ம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் படிக்கட்டு வழியாக மலைக்கோயிலுக்கு பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மலைப்பாதை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதால் சில பகுதிகளில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பக்தர்கள், பொதுமக்ள்ள நலன்கருதி மலைப்பாதையில் நடந்து செல்வதற்கு இன்று 14 முதல் வருகிற 20ம் தேதி வரை பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது