திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

திருத்தணி: திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் பறித்த 2 பேரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆந்திர, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் தினமும் 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று மாலை திருத்தணியைச் சேர்ந்த ரியானா என்ற பெண் அவரது கணவர், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன், தாழவேடு பகுதியைச் சேர்ந்த கொல்லாபுரி, அவரது மனைவி ஆகியோர் பேருந்துக்காக காத்திருந்தனர்.

மாலை நேரம் என்பதால் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்போது 2 பேர் திடீரென்று அங்கு இருந்தவர்களின் செல்போன்களை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பஸ் பயணிகள் அவர்களை விரட்டிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். 2 பேரையும் போலீசார் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பயணிகள் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ரெட்டியார்சத்திரம் அருகே 10  மயில்கள் விஷம் வைத்து கொலை?

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!

காட்டுக் கோழி (Junglefowl)