திருப்பூர் வாவிபாளையம் குடியிருப்பில் கேஸ்பைப் உபகரணம் வெடித்து விபத்து: பெண்ணுக்கு கால் முறிவு

திருப்பூர்: திருப்பூர் வாவிபாளையம் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் தங்கியுள்ள சுந்தரம்பாள் என்பவர் மீது கேஸ்பைப் உபகரணம் வெடித்து விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இக்குடியிருப்பில் சுந்தராம்பாள் என்பவர் குடியிருந்து வருகிறார் இந்நிலையில் நேற்று அவர் குடியிருப்பு வளாகத்தில் நடந்து வந்தபோது அருகில் அதானி கேஸ் பைப் லைன் செல்லும் நிலையில் அதனுடைய டெஸ்டிங் பாயிண்ட் அங்கு அமைந்திருக்கிறது.

100 மீட்டர் தொலைவில் அதில் ஏற்பட்ட வெடி விபத்தில் உபகரணம் பறந்து வந்து சுந்தராம்பாளின் காலில் விழுந்ததால் கால் முறிவு ஏற்பட்டது. தற்சமயம் கோவை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் .குடியிருப்பு வாசிகள் போதிய பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கேஸ் பைப் லைனை சுற்றி முறையாக பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் .மேலும் குடியிருப்பை சுற்றி மதில் சுவரை எழுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

Related posts

ஜாபர் சாதிக் மீதான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

யுபிஎஸ்சி- ஜியோ சயின்டிஸ்ட் தேர்வு அறிவிப்பு

பெரும் பூநாரை (Greater Flamingo)