திருப்பூர் அருகே சோகம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் அருகே தம்பதியினர் 7 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழுகிய நிலையில் போலீசார் சடலங்களை மீட்டனர். திருப்பூர் மாவட்டம் அணைக்காட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் 3 அடுக்குமாடி கொண்ட வீட்டில் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை முதலாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உள்பக்கமாக பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் வராண்டாவில் ஒரு பெண்ணும், படுக்கை அறையில் அவரது கணவர் மற்றும் மகள் என 3 பேர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அணைக்காடு பகுதியில் டீக்கடை வைத்திருந்த இராஜபாளையத்தை சேர்ந்த நாகுசுரேஷ் (35) என்பதும், அவரது மனைவி விஜி (29), மகள் முத்திஸ்வரி (7) என தெரிய வந்தது. நாகுசுரேஷ் அணைக்காடு பகுதிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் குடிவந்துள்ளார். இவர்கள் 4 நாட்களுக்கு முன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. அழுகிய நிலையில் இருந்த 3 பேரின் சடலங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு காரணம் குறித்து போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவருக்கு நாகுசுரேஷ் பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் சூர்யமூர்த்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சூர்யமூர்த்தி மனைவியிடம் நாகுசுரேஷ் கோட்டுள்ளார். பணம் நீங்கள் கொடுத்தது குறித்து தனக்கு தெரியாது என சூர்யமூர்த்தி மனைவி கூறியுள்ளார். இதனால், மனவேதனையில் நாகுசுரேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 3 வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை: பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஊக்கத்தொகை