திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற வழக்கில் பாஜக நிர்வாகி கைது.

திருப்பூர்: திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற வழக்கில் பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி ஸ்ரீநகர் முக்கிய வீதியில் துரை என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் (HITACHI) தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தை கடந்த 20ஆம் தேதி அன்று ஹாலோ பிளாக் கல் கொண்டு உடைத்தும் அதிலிருந்து பணத்தை திருடவும் முயற்சி செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருப்பூர் அவிநாசி கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (54) என்பவரை கைது செய்தனர்.

இவர் ஹாலோ பிளாக் கல் கொண்டு 55 ஆயிரம் மதிப்புள்ள இயந்திரத்தை உடைத்து சேதப்படுத்தியும் பணத்தை திருடவும் முயற்சி செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட முருகானந்தம் பாஜக கட்சியின் திருப்பூர் மாவட்ட பிரச்சாரணி செயலாளராக உள்ளார்.

Related posts

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் – படாபரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி