திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.74.35 லட்சம் வசூல்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டத்தில், ரூ.74.35 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் காணிக்கை உண்டியல் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் குமரவேல், சரவணன், மேகவண்ணன், ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த, உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்களால் 74 லட்சத்து 35 ஆயிரத்து 790 ரூபாய் ரொக்கம், 297 கிராம் தங்கம், 4,910 கிராம் வெள்ளி ஆகியவை போடப்பட்டு இருந்தது. இந்த பணியில் ஏராளமான பக்தர்கள், கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Related posts

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!