திருப்பத்தூர் – புதுப்பேட்டை கூட்டுச் சாலையில் பாஜகவின் கொடிக் கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் – புதுப்பேட்டை கூட்டுச் சாலையில் பாஜகவின் கொடிக் கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்தார். அண்ணாமலையை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 50 அடி உயர இரும்பு கொடிக் கம்பம் விழுந்து கலீல் என்பவர் தலையில் காயம் ஏற்பட்டது. கொடிக் கம்பம் விழுந்து படுகாயமடைந்தவரின் தலையில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடிக் கம்பம் விழுந்து படுகாயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அங்கு கூடியிருந்தவர்கள் முன்வரவில்லை என புகார் எழுந்துள்ளது.

Related posts

செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

2060-ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்: ஐநா

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு