திருப்பத்தூரில் 107 டிகிரி வெப்பம் பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. அதனால் ஏற்பட்ட வெப்பசலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது. அதிக பட்சமாக திருப்பத்ததூரில் 107 டிகிரி வெப்பம் பதிவானது. ஈரோட்டில் 104 டிகிரி, சேலத்தில் 102 டிகிரி, வேலூரில் 101 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடுவதால், நாளை முதல் 15ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்