திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மகா விஷ்ணுவின் வாகனமான கருட உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடியை மலையப்ப சுவாமி, தாயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி ஆகியோர் நான்கு மாடவீதியில் நாதஸ்வர இசைக்கு மத்தியில் கோயில் யானைகள் முன்னால் அணிவகுத்து செல்ல ஊர்வலமாக வந்தனர்.

ஊர்வலத்தில் பக்தர்கள் கோலாட்டம், பஜனைகள் செய்தபடி பங்கேற்றனர். பின்னர் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட கொடியை கொடிமரத்தில் ஏற்றினர். இதனைதொடர்ந்து பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு வாகன மண்டபத்தில் இருந்து பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளிய மலையப்ப சுவாமியை முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் வழிபட்டனர்.

நேற்று ஏழு தலைகளுடன் கூடிய பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்தில் இருந்த பழைய கயிற்றை கழற்றி புதியதாக கொடிமரத்தில் கயிறு கட்ட முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கொடி மரத்தின் உச்சியில் இருந்த இரும்பு வளையம் உடைந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு