திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.86 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று 59 ஆயிரத்து 646 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 21 ஆயிரத்து 938 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று இரவு எண்ணப்பட்டது.

அதில், ரூ.3.86 கோடி காணிக்கையாக கிடைத்தது. விடுமுறை நாளான இன்று காலை நிலவரப்படி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 7 அறைகளில் பக்தர்கள் காத்துள்ளனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

Related posts

பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுகிறார்: திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

ஆலத்தூர் டாஸ்மாக் கடைக்குள் சென்று கலெக்டர் அதிரடி ஆய்வு

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்