திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.71 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு பிறகும் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் நீண்ட கியூவிலும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று 83,740 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 35,462 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தினமும் மாலையில் எண்ணப்படுகிறது. அதன்படி நேற்று நடந்த கணக்கீட்டின்படி ரூ.3.71 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 19 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி