திருப்பதி கோயிலில் ரூ.4.25 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை காரணமாக சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இதேபோல் நேற்று ஒரேநாளில் 81,831 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 34,542 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

கோயில் உண்டியலில் ரூ.4.25 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 26 அறைகள் நிரம்பி உள்ளன. நேர ஒதுக்கீடு டிக்கெட் இன்றி வரும் பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு