திருப்பதி கல்யாணி அணை மற்றும் நாயுடுபேட்டை ஆகிய இடங்களில் வெட்டி கடத்தப்பட்ட 18 செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதி: திருப்பதி கல்யாணி அணை மற்றும் நாயுடுபேட்டை ஆகிய இடங்களில் வெட்டி கடத்தப்பட்ட 18 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிக்கடிகலகோனா வழியாக ஸ்ரீவாரிமெட்டு நோக்கி ரோந்து சென்றபோது சிலர் செம்மரக்கட்டைகளை எடுத்துச் சென்றுள்ளனர். அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தபோது, கற்கள் மற்றும் அரிவாள்களால் தாக்கிவிட்டு கும்பல் தப்பி ஓட முயற்சி செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூரைச் சேர்ந்த மணி (37) என்பவர் பிடிபட்டார்; மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். கடத்தல்காரர்கள் விட்டுவிட்டுச் சென்ற 11 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்