திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.4.46 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திங்கட்கிழமையான நேற்று 77,878 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 30,140 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

கோயில் உண்டியலில் ரூ.4.46 கோடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் 31 அறைகளில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

Related posts

ரூ.1 லட்சம் லஞ்சம்; மி.வா. அதிகாரிகள் கைது

இம்ரான்கானின் மனைவிக்கு முன்ஜாமீன்

ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைதானவர் மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் ஓட்டம்