24 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் நிரம்பியுள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. மேலும் தங்கும் அறைகளுக்கு வர சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள கிருஷ்ணதேஜா கெஸ்ட் அவுஸ் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை உள்ளது. அதேநேரத்தில் ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். இதற்கிடையில் ேநற்று 80,735 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 40,524 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை கணக்கிடப்பட்டது. அதன்படி ₹3.19 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Related posts

ரூ.26.61 கோடி டெண்டர் ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது வழக்கு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தென்மலையில் குவிந்த கேரள மக்கள்: சுற்றுலாத்துறைக்கு ஒரேநாளில் ரூ.3.17 லட்சம் வருவாய்

60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்: 2025ல் நடத்த திட்டம்