திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணிநேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருமலை: கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்தை விட தற்போது அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டிய நிலை உள்ளது.இந்நிலையில் நேற்று 78,686 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 37,888 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அதில் ரூ.3.54 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்