திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பது மனதை புண்படுத்துகிறது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வேதனை

கோவில்பட்டி: திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பது மனதை புண்படுத்துகிறது என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பாஜ வடக்கு மாவட்ட அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். பின்னர் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வருவேன். திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பது என்பது ஒரு பக்தனாக எனது மனதை புண்படுத்தி இருக்கிறது. மிகப்பெரிய தவறு கண்ணுக்கு தெரிந்து கலப்படம் இருந்தது என்பதை மாநிலத்தின் முதலமைச்சர் குற்றம் சொல்லி இருக்கிறார்.

நாட்டிலே உயர்ந்த தரமுடைய குஜராத் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசின் உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் சோதனைக்கு சென்று இருக்கிறார்கள். கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். 2047ல் இந்தியா வல்லரசாக வேண்டும், அப்துல்கலாமின் கனவினை நனவாக்க வேண்டும் என்பது போன்ற நோக்கத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது ஒன்றிய வெளியுறவுத்துறை துரிதமாக செயல்பட்டு மீட்டுக்கொண்டு வந்திருக்கிறது. தமிழகத்தில் 1 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார.

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு