திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

திருமலை: திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தலைமையில் யுஐடிஏஐ டிசிஎஸ், ஜியோ மற்றும் தேவஸ்தான ஐடி துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் செயல் அதிகாரி ஷியாமளாராவ் பேசுகையில், ‘இதுவரை பக்தர்கள் தரிசனம், தங்குமிடம், ஆர்ஜித சேவைகள், பிற சேவைகளுக்கு ஆன்லைன் மூலம் தேவஸ்தான இணையதளத்தில் செய்கின்றனர். இருப்பினும் இதில் இடைதரகர்கள் செயல்பாடு உள்ளதால் அதனை கட்டுப்படுத்த தேவஸ்தான இணையத்தளத்தின் ஆதார் இணைப்பின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்