திருப்பதியில் 3வது நாள் பிரமோற்சவம் கோலாகலம்; சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்களுக்கு உரிய தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சுவாமி வீதியுலாவின்போது மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து, கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பக்தர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் படியபடி சுவாமி வீதியுலாவில் பங்கேற்றனர். மேலும் பக்தர்கள் பல்ேவறு சுவாமி வேடம் அணிந்து, சுவாமியின் லீலைகளை விளக்கும் வகையில் பங்கேற்றனர்.

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்