திருப்பதி மலை ஏறும் பக்தர்களுக்கு தடி பாதுகாப்பு வழங்க முடிவு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி மலைப்பாதையில் ஏறும் பக்தர்கள் பாதுகாப்புக்கு தடி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. படிகள் ஏறுமிடத்தில் பக்தர்கள் பாதுகாப்பு காரணத்திற்காக தடியை கொடுத்து அனுப்ப முடிவு செய்துள்ளனர். திருப்பதி மலையில் பக்தர்களை சிறுத்தைகள் தொடர்ந்து தாக்கி வருவதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிறுத்தைகள் போதாதென கரடிகளும் திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்துவதால் இனி “தடி” பாதுகாப்பு கொடுக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி மலைப் பாதையில் லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகே நடந்து சென்ற லட்ஷிதா(6) என்ற சிறுமி நேற்று திடிரென காணாமல் போன நிலையில், காயங்களுடன் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமலை: திருப்பதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கொவூரு மண்டலம்கோத்திரெட்டிபாலம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி சசிகலா.

இவர்களது மகள் லட்ஷிதா(6). இவர்கள் 3 பேரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக மலைப்பாதை வழியாக சென்றனர். இரவு 7.30 மணியளவில் லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி எதிரே சென்றபோது லட்ஷிதா திடீரென மாயமானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்ஷிதாவை இரவு முழுவதும் தீவிரமாக தேடினர். மறுநாள் காலை வனப்பகுதியில் லட்ஷிதா காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுத்தையை பிடிக்க 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. பின்னர் லட்சுமி நரசிம்ம சன்னதி அருகே உள்ள வனப்பகுதியில் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இந்த நிலையில், மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் ஏற்பட்டிருக்கிறது. இதை கண்ட மலைப்பாதையில் சென்ற பக்தர்கள் சத்தம் போட்டதால் சிறுத்தை அங்கிருந்து கட்டுக்குள் ஓடியது. இதனால் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்ட இருப்பதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் திருப்பதி நடைபாதையில் குழந்தை மீது சிறுத்தை தாக்குதல் நடத்தப்பட்டது வருத்தமளிக்கிறது. நடைபாதையில் வனத்துறையினருடன் சேர்ந்து 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும். சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்கப்படும். திருமலைக்கு செல்ல ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி ஆகிய இரண்டு நடைபாதை உள்ளது. அதில் ஸ்ரீவாரி மெட்டு பாதையில் மாலை 6 மணி வரையும், அலிபிரியில் இரவு 10 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இனி இரண்டு நடைபாதையிலும் மாலை 6 மணி வரையே பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும்’ என்றார்.

இந்த நிலையில் இனிமேல் திருப்பதி மலைப்பாதையில் ஏறும் பக்தர்கள் பாதுகாப்புக்கு தடி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. படிகள் ஏறுமிடத்தில் பக்தர்கள் பாதுகாப்பு காரணத்திற்காக தடியை கொடுத்து அனுப்ப முடிவு செய்துள்ளனர். திருப்பதி மலையில் பக்தர்களை சிறுத்தைகள் தொடர்ந்து தாக்கி வருவதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்