திருப்பதியில் மீண்டும் சிறுத்தைப் புலி, கரடி நடமாட்டம்: பக்தர்கள் கூட்டமாகச் சென்று வர வனத்துறை அறிவுறுத்தல்

ஆந்திரா: திருப்பதி திருமலை நடைபாதையில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள சேஷாசலம் மலைத்தொடரில் அரியவகை மரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளது. இந்த விலங்குகளில் சிறுத்தை மற்றும் கரடிகள் பக்தர்கள் நடந்து செல்லக்கூடிய நடைபாதையில் வந்து செல்வது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்களை வைத்து பக்தர்களை எச்சரிக்கை செய்து வந்தனர்.

ஏற்கனவே சிறுத்தை தாக்கியதில் சிறுமி உயிரிழந்த நிலையில் சிறுவன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து 6 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு 2 வனப்பகுதியில் விடப்பட்டு, 1 விசாகபட்டினத்திலும் மற்ற 3 திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவிலும் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பக்தர்களை வனவிலங்குகள் தாக்காத வகையில் வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

கடந்த 16ம் தேதி மற்றும் 26, 29 தேதிகளில் சிறுத்தையும், கரடியும் வந்து சென்றிருப்பது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்யப்பட்டு இரவு நேரங்களில் செல்ல கூடிய பக்தர்கள் மற்றும் பகல் நேரத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் கூட்டம், கூட்டமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் பக்தர்கள் திருப்தியிலிருந்து, திருமலைக்கு செல்லும் போது அவர்களுக்கு கைத்தடி வழங்கப்பட்டு வருகிறதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு