திருப்பதி மலைப்பாதையில் தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்து

*அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் தப்பினர்

திருமலை : திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் சென்ற கார் தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் லேசான காயங்களுடன் தப்பினர்.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் திருப்பதி ஏழுமலையான் ேகாயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர், சுவாமி தரிசனம் செய்ததும் நேற்று
காரில் புறப்பட்டு சென்றனர்.

தொடர்ந்து, திருப்பதி மலைப்பாதை 57வது வளைவில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணம் செய்த பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினர்.இதையடுத்து, தேவஸ்தான மீட்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கிய காரை மீட்டு திருப்பதிக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து திருமலை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்; ரஷ்ய நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது: 18 மாதம் தடங்கலின்றி மின் உற்பத்தி செய்ய முடியும்

ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை; ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்: ஓமன் நாட்டில் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்தியதால் பதட்டம்

பாஜகவின் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி முதல்வர் யோகி ராஜினாமா செய்கிறாரா..? கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்கள்