திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று 68,558 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 29,508 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.13 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது.

பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். இந்நிலையில் நாளை புரட்டாசி மாத 3ம் சனிக்கிழமை மற்றும் வாரவிடுமுறை நாள் என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்று அதிகாலை முதல் அதிகரித்துள்ளது.

பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தினமும் நேர ஒதுக்கீடு இலவச திவ்ய தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது புரட்டாசி மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து சுமார் 40 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

இதனால் புரட்டாசி மாதம் முடியும் வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் நேர ஒதுக்கீடு திவ்ய தரிசன டிக்கெட்டை ரத்து செய்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமையான இன்றும் நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்