திருப்பதி மாவட்டத்தில் முதியவர்கள், பெண்களின் புகார்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

*போலீசாருக்கு எஸ்பி உத்தரவு

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் முதியவர்கள், பெண்களின் புகார்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டுள்ளார். திருப்பதி மாவட்ட காவல்துறை எஸ்பி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

இந்த குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட எஸ்பி பரமேஸ்வர் புகார்களைப் பெற்று பிரச்னைகளுக்கு சாதகமாக பதிலளித்து ஒவ்வொருவரின் வழக்குகளையும் விசாரித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார்களை விரைந்து தீர்த்து நீதி வழங்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் புகார்களுக்கு பதில் அளிப்பதில் அலட்சியம் காட்டக் கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.குடும்பத் தகராறு, நிதிக் குற்றங்கள், சொத்துத் தகராறு உள்ளிட்ட 70 புகார் மனுக்கள் பெறப்பட்டது.

அப்போது எஸ்பி பரமேஸ்வர் ஸ்பந்தனா திட்டத்தின் கீழ் வரும் அனைத்து புகார்களும் சட்டப்படி விசாரிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் புகார்தாரர்களின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். தொலைதூரத்தில் இருந்து எஸ்பி அலுவலகத்திற்கு வர முடியாதவர்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம்.

மேலும் முதியவர்கள் பெண்கள் அளிக்கும் புகார்களுக்கு முன்னுரிமை அளித்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பிக்கள் வெங்கடராவ், விமலாகுமாரி, குலசேகர் எல்ஓ, யஷ்வந்த் எஸ்டிபிஓ ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு