திருப்பதியில் பக்தர்கள் திரண்டனர் அலிபிரியில் படி பூஜை உற்சவம் கோலாகலம்

*கோலாட்டம் ஆடிய ெபண்கள்

திருமலை : திருப்பதி அலிபிரியில் படி பூஜை உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீ தாளபாக்க அன்னமையாவின் 521வது பிறந்தநாளை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னமாச்சார்யா திட்டத்தின் சார்பில் படி பூஜை உற்சவம் நேற்று நடந்தது. இதில் அன்னமாச்சார்யா திட்ட இயக்குநர் அகெல்லா விபீஷண சர்மா பேசியதாவது:

சன்மார்க்க வழியில் மலைப்பாதையில் நடந்து கடவுளை அடைவதே படி பூஜையில் பொருள். அக்காலத்தில் எத்தனையே முனிவர்கள், ரிஷிகள், மன்னர்கள், பேரரசர்கள் உள்ளிட்ட மகான்கால் பல இந்த படி வழியாக திருமலைக்கு நடந்து சென்று சுவாமியின் அருளைப் பெற்றனர். இதுபோன்ற படிபூஜை ஊர்வலத்தில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்று ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட பஜனை மண்டலி உறுப்பினர்கள் பக்தியுடன் பஜனைகள் செய்தபடி ஏழுமலையை ஏறி இறைவனை வழிபட உள்ளனர். நாளை (இன்று) மாலை திருமலையில் உள்ள நாராயணகிரி பூங்காவில் கோஷ்டி காணம் நடைபெறும் என்றார்.

முன்னதாக முதலில் அலிபிரி பாத மண்டபத்தில் அன்னமாச்சார்யா வம்சத்தினர் படி பூஜை செய்தனர். இந்நிகழ்ச்சியில், அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்கள் அன்னமய்யா கீர்த்தனைகளில் பாடல்களை பாடினர். இந்நிகழ்ச்சியில் கோவிந்தராஜ சுவாமி கோவில் துணை இ.ஓ. சாந்தி, அன்னமாச்சார்யா வம்சத்தினர் தாளபாக்க ஹரிநாராயணாச்சாரி மற்றும் அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு