15 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 72,294 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,855 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.39 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள ஏடிசி காம்ப்ளக்ஸ் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 15 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Related posts

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு

விநாயகர் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து போராட்டம்..!!